Breaking
Sun. Mar 16th, 2025

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று புதன்கிழமை (29) தபால் திணைக்களத்திடம் கையளிக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.

இம்முறை தேர்தலுக்காக, ஒருகோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 491 வாக்காளர் அட்டைகள் கையளிக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டார்.

தபால் ஊழியர்கள், ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை வீடுகள் தோறும் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கவுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன கூறினார்.

வாக்காளர் அட்டை விநியோகிப்பதற்கான விசேட தினங்களாக ஓகஸ்ட் 2ஆம் மற்றும் 9ஆம் திகதிகள் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

-TM-

Related Post