Breaking
Sat. Nov 16th, 2024

–எம்.ஐ.அப்துல் நஸார்–

வாக்காளர்களுக்கு போதைப் பொருள் மற்றும் மதுபானம் ஆகியவற்றை பகிர்ந்தளிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் புத்தளம், பதுளை மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கெபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இது தேர்தல் சட்டங்களை மீறுகின்ற செயற்பாடு மாத்திரமல்லாது மதுவரி கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளை மீறுகின்ற செயற்பாடுமாகும் என கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

ஆதரவாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கிடையே மதுபானங்களை வினியோகித்தல் ஒரு வகையில் சமூக விரோத செயற்பாடு என்பதோடு இதன் மூலம் தேர்தல் வன்முறைகள் அதிகரித்துச் செல்வதற்கான முகாந்திரம் காணப்படுவதாகவும் தென்னகோன் சுட்டிக்காட்டினார்.

இது சம்பந்தமாக கெபே அமைப்பு மதுவரி திணைக்களத்திரமும் தேர்தல்கள் திணைக்களத்திடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து கெபே அமைப்பிடம் இது வரை 244 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு அவற்றுள் 224 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறிய முறைப்பாடுகளாகவும் மேலும் 20 முறைப்பாடுகள் வன்முறைகளோடு தொடர்புபட்டவையாகவும் காணப்படுவதாக கெபே அமைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Post