தேர்தல் காலங்களில் மட்டும் வந்து வீரவசனங்களைப் பேசிவிட்டு வாக்குகளை கொள்ளையடிக்கும் தந்திரோபாயம் எம்மிடம் இல்லையென்றும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே அரசியல் நடத்துகின்றோம். என அமைச்சர் றிசாத்பதியுத்தீன் தெரிவித்தார்.
அமைச்சர் ரிசாத்பதியுத்தீன் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் (2014-03-18) மு.பகல் ஊடகவியலாளர்கள் சந்திப்பும், கட்சியின் வெப்தளமும் றிசாத் பதியுத்தீன் வெப்தளமும் ஆரம்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருந்தொகையான ஊடகவியாளர்கள் கலந்துகொண்டனர். கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீட், ஏற்றுமதி இறக்குமதி அபிவிருத்தி திணைக்களத்தின் உப தலைவர் கலாநிதி மரிக்காரும் கலந்து கொண்டார்.
அங்கு ஊடகவியாலாளர் மத்தியில் அமைச்சர் ரிசாத்பதியுத்தீன் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடாந்து உரையாற்றுகையில்
சொந்த மண்ணிலே சுதந்திரமாக வாழ்ந்த நாம் தீய சக்திகளால் துரத்தப்பட்டோம். நானும் ஒரு அகதியாகவே 20 வயதில் வந்தவன். புத்தளத்திலும் அனுராதபுரத்திலும் குருநாகளிலும் எமதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதனால் சுகம் இழந்தோம், வீடு வசால்களையும் விளைச்சல் நிலங்களையும் இழந்தோம். 20 ஆயிரம் வீடுகள், 60 பாடசாலைகள், 70 பள்ளிவாசல்கள் இழந்துள்ளோம்.
அண்மையில் பொதுபலசேன என்ற அமைப்பு எனக்கு எதிராக குற்றஞ் சாட்டியுள்ளனர் நான் வில்பத்து என்ற காட்டில் காட்டை வெட்டி முஸ்லீம்களைக் கொண்டு குடியேற்றுவதகாக தெரிவித்திருந்தனர். அவர்களுக்குத் தெரியாது. 20 வருடங்களுக்குப் பிறகு அங்கு வாழ்ந்த முஸ்லீம்களது கிராமம் காடாகவே காட்சியளிக்கும். அங்கு வாழ்ந்த முஸ்லீம்களுக்கென வீடுகள் கொண்ட கிராமங்கள் உள்ளன. மீள அம் மக்கள் அங்கு செல்வதென்றால் காடுகளைத்தான் வெளிசாக்க வேண்டும்.
மு.காங்கிரசின் நடவடிக்கைகளில் வெறுப்;புற்ற பல புத்திஜீவிகள் என்னுடன் இணைந்தனர். 5 பேர் கொண்டு முதன் முதலில் இக் கட்சியை ஆரம்பித்தேன். கடந்த 5 வருடங்களுக்குள் 61 உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், 6 மாகாணசபை உறுப்பினர்கள், ஒரு பிரதியமைச்சர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களளைக் கொண்ட கட்சியாக வட கிழக்கு மாகணத்தில் உள்ளது.
கிழக்கில் முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கு முதலமைச்சர் வழங்கும்படி வேண்டினோம் அமைச்சர்கள் பசில் ராஜபக்ச. டலகஸ் அழகப்பெரும போன்றோர்கள் எங்களுடன் பேசினார்கள் அவருக்கு தேசியப்பட்டியல் ஊடக பாராளுமன்றம் அனுப்பி பிரதியமைச்சர் பெற்றுத் தருவதாக வாக்குருதியளித்தார்கள். ஆனால் இவ் வாக்குருதி இதுவரையும் நடைபெறவில்லை.
தம்புள்ள பாள்ளிவாசல் உடைக்கப்பட்டது, பெசன் பக் தாக்கப்பட்டது, கிராண்பாஸ் பள்ளிவாசல் பொலிசார் பாத்திருக்கத் தக்க உடைக்கப்பட்டது. அதற்கான இருவெட்டுக்களையும் பொலிஸ் மாஅதிபரிடம் ஒப்படைத்தேன். இதுவரையும் அப்பொலிசாருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தெஹிவளையில் உள்ள கடவத்தை பள்ளிவாசல் தெஹிவளை பொலிசாரினாலேயே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதனை அரசு பார்த்துக்கொண்டுதான் இருந்தது. ஆனால் அல்லஹ்வின் உதவியால் நீதிம்னறத் தீர்பின்படி அந்த வழக்கை வெற்றிபெற்று மீண்டும் பள்ளிவாசல் திறக்கப்பட்டது.
முஸ்லீம் பெண்களின் பர்தா உடை மற்றும் ஹலால் உணவு விடயத்தில் பொதுபலசேன மற்றும் அதிதீவிர பௌத்த இயக்கங்கள் முஸ்லீம்களை இம்சைப்படுத்துகிறார்கள். அதற்காக ஆர்பாட்டமும் துவேச போக்குடை வார்த்தைகளையும் ஊடகங்களில் பரப்பி பெரும்பாண்மைச் சமுகத்திடமிருந்து முஸ்லீம்கள் பற்றி இனத்துவேச மனப்பாண்கை ஏற்படுத்துகின்றனர். அதனைக் . இவர்களையெல்லாம் அரசு கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் ஆனால் அது நடைபெறவில்லை.
தம்புள்ள பள்ளிவாசல் உடைப்பை வைத்தே கிழக்கில் முஸ்லீம் காங்கிரஸ் தலைமைத்துவம் தேர்தல் வீரவசனம் பேசியது. அதன் பின்னர் சில உறுப்பினர்களை பெற்று மீண்டும் அரசுக்குள் வந்து சங்கமித்தது. ஆனால் வடக்கிலோ கிழக்கிலோ வாக்களித்த மக்களுக்கு எவ்வித விமோசனமும் கிடைக்கவில்லை இக் கட்சி வடக்கில் உள்ள எந்தவொருஎமது கட்சி கொழும்பில் மட்டும் தேர்தலில் இம்முறை முதன் முறையாக எமது சின்னத்தில் தேர்தலில் குதித்துள்ளது.
இனிவரும் காலத்தில் எமது கட்சி நாடுபூராகவும தணித்தே தேர்தலில் குதிக்கும் எமது கட்சியல் சிங்கள மாகணசபை 5 தமிழ் உறுப்பினர்கள் உள்ளனா. இக் கட்சி இனரீதியான கட்சி அல்ல எதிர்காலத்திலும் சகல சமுகங்களையும் இணைத்துக்கொண்டு எமது கட்சி தேர்தலில் குதிக்கும் என அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்தார்.