எமது மக்களின் தேவைகளை நாம் பெற்றுக்கொடுக்க முற்படுகின்ற சில கட்சிகள் தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டுவருகின்றன.இடம் பெயர்ந்த மக்களின் எத்தனையோ தேவைப்பாடுகள் இருக்கின்ற போது அது தொடர்பில் பேசுவதற்கு முடியாதவர்கள் இன்று வந்து மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க முயல்கின்றனர் என்று வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் 1 இலக்க வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
புத்தளம் கரிக்கட்டி ஹிதாயத் நகர் பிரதேசத்தில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த கூட்டத்தின் போது கடந்த வட மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட வேட்பாளரான மௌலவி அப்துல் ரஹ்மான் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.
மேலும் அமைச்சர் றிசாத் இங்கு உரையாற்றுகையில் –
இன்று எமது கட்சியின் பக்கம் மக்கள் அலை அலையாக வந்து சேர்கின்றனர்.இது ஏன் என்று நீங்கள் பார்க்க வேண்டும்.அல்லாஹ்வை தவக்கள் வைத்து நாம் எமது சமூகப் பணியினை ஆரம்பித்தோம்.அதனை தொடர்ந்து செய்துவருகின்றோம்.இந்த வளர்ச்சியினை தாங்கிக் கொள்ள முடியாத கட்சிகள் எம்மை இன ரீதியான தாக்கிவருகின்றன.இந்த இன ரீதியான செயற்பாடுகளுக்கு தமிழ் தனியார் தொலைக்காட்சியொன்று தலைமை தாங்கி வருகின்றதை காணமுடிகின்றது.
இந்த நாட்டில் ஊடகத்தின் நிலைய இவவாறு இருக்கின்றது.வங்குரோத்து அரசயில் வாதிகளையும்,இனவாத சிந்தனை கொண்ட அரசியல் வாதிகளையும் தன்வசம் வைத்துக்கொண்டு தின்நதோறும் எனக்கும்,எமது முஸ்லிம்களுக்கும் எதிராக,மீள்குடியேற்றத்திற்கு எதிராக கடும் வீச்சுடன் செயற்படுகின்றன.
எமது மக்களின் தியாகத்தால் வென்றெடுத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்த சதிகளுடன் இணைந்துள்ளது எமது மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும்.
எனது அரசியல் வாழ்வில் எமது எமது மக்களின் நலன் குறித்தே எனது பணிகள் இடம் பெறுகின்றது.ஆனால் சில அரசியல்வாதிகள் மக்களை மறந்து அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கு முன்னுரிமையளித்து செயற்படுகின்றனர்.
நாங்கள் இடம் பெயர்க்கப்பட்டு வந்தபோது எம்மை அரவனைத்த மக்கள் புத்தளம் மக்கள் அவர்களுக்கு நாம் என்றும் நன்றியுணர்வுடன் இருக்கின்றோம்.அவர்கள் கடந்த பல வருடங்களாக பெற்றுக் கொள்ள முடியாமல் போன நல்லதொரு அரசியல் தலைமைத்துவத்தை அடைந்து கொள்ள எமது மக்கள் பிரார்த்தனைகளை செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கேட்டுக்கொண்டனர்.