ஊவா மாகாண சபைத் தேர்தல் வாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுக்கள் வழங்கும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ம் திகதி வரை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் ஒவ்வொரு கட்சிகளுடனும் தனித்தனியாக கலந்துரையாடலில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டமைக்கு அமைய இந்த கலந்துரையாடல் நடைபெறுகின்றது.
இதேவேளை நேற்றையதினம் ஐனநாயகக்கட்சியுடன் தேர்தல்கள் ஆணையாளர் கலந்துரையாடலை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.