Breaking
Mon. Dec 23rd, 2024
இலங்கை அளித்த வாக்குறுதிகளை அமுல்படுத்த வேண்டுமென அனைத்துலக மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

பொறுப்பு கூறுதல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் செயற்படுத்தப்பட வேண்டியத அவசியமானது என தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்த அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம், பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் நம்பிக்கை ஒளிக்கீற்றை உருவாக்கியுள்ளது. எனினும், பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப இதுவரையில் சொற்பளவிலான நடவடிக்கைகளே இலங்கையில் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட விடயங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் அமுல்படுத்தப்பட வேண்டும் என மனித அனைத்துலக மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

By

Related Post