Breaking
Sun. Sep 22nd, 2024
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஸ்ரீ.சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் கடுமையாக வாக்குவாதப்பட்டுக் கொண்டதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

விமல் வீரன்ச, தினஸ் குணவர்தன உள்ளிட்டவர்கள் அண்மையில் குருணாகல் மாவட்ட சுதந்திரக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற அரசியல்வாதிகளை சந்தித்து தனித்து போட்டியிடுவது குறித்து பேசியுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன் போது, “சேர் எனக்கும் பேச இடமளியுங்கள்” எனக் கூறிக் கொண்டு எழுந்த குமார வெல்கம,

“அந்தக் கூட்டத்திற்கு நானும் சென்றேன், தயாசிறி குற்றம் சுமத்துவதனைப் போன்று எந்தவிதமான பேச்சுக்களும் நடத்தப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிறந்த நாள் நிகழ்வுகள் அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளமை குறித்து அறிவுறுத்தி கட்சி உறுப்பினர்களை அங்கு அழைக்கும் நோக்கிலேயே சென்றிருந்தோம் என தெரிவித்துள்ளார்.

ஆம் அது எனக்கு தெரியும், அப்படியென்றால் பிரச்சினை இல்லைதானே என ஜனாதிபதி தயாசிறியை பார்த்துக் கேட்டுள்ளார்.

இல்லை இல்லை அங்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்யிடுவது குறித்தே பேசப்பட்டுள்ளது என தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் ஆவேசமாக எழுந்த குமார வெல்கம,

“தயாசிறி நான் உமக்கு ஒன்றை சொல்கின்றேன். உமக்குத் தேவை இந்த கட்சியை பிளவடையச் செய்வதாகும்.

34 ஆண்டுகளாக நான் தொகுதி அமைப்பாளர், சிறிமா அம்மையார் என்னை அமைப்பாளராக நியமித்தார். நான் ஒரிஜனல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளன்.

உம்மைப் போன்று பாய்ந்து பாய்ந்து மீண்டும் பாய்ந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு சென்று வரவில்லை.

புரிந்ததா? எனவே நாம் கட்சியை நேசிக்கும் நபர்கள். நாம் இந்த கட்சியை விட்டு விலகிச் செல்லும் நிலைக்குத் தள்ள வேண்டாம் என மிகுந்த கோபத்துடன் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தயாசிறி ஜயசேகரவும் எழுந்து குமார வெல்கமவை கடுமையாக திட்டியுள்ளார்.

“போதும் போதும் தற்பொது இதனை நிறுத்திக் கொள்ளுங்கள் இருவரும் அமருங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

By

Related Post