Breaking
Sat. Nov 16th, 2024

துபாயில் இனி யாரையாவது வாட்ஸ்அப் மூலமாக திட்டினால் 92 லட்சம் இலங்கை ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முக்கிய நாடுகளில் ஒன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ். அதிக அளவிலான வேலை வாய்ப்பு உள்ள இடமாகவும் அந்நாடு உள்ளது. ஆனால், அங்கு இருந்துக்கொண்டு இலவச வைபை வசதியை பயன்படுத்தும் போது மற்றவர்களை திட்டுவது, அந்நாட்டைப் பற்றி மோசமான விஷயங்களை பகிர்ந்து கொள்வது போன்றவற்றை செய்யாமல் இருப்பது அவர்களின் பர்ஸ்க்கு நல்லது.

ஏனென்றால் தற்போது வெளியிடப்பட்டுள்ள உத்தரவின்படி வாட்ஸ்அப் மூலமாக யாரையாவது திட்டினால் 2.5 லட்சம் திர்ஹம் வரை (இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 92 லட்சம்) அபராதம் விதிக்க முடியும். மேலும் குற்றம் கடுமையானதாக இருக்கும் பட்சத்தில் நாடுகடத்தப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, தூபாய் செல்பவர்கள், யாகாவாராயினும் நாகாக்க என்ற குறளை மறக்க வேண்டாம்.

Related Post