Breaking
Fri. Jan 10th, 2025

பேஸ்புக்கின் வசமுள்ள ‘வாட்ஸ் அப்’ தற்போது அதில் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை என்கிரிப்டு செய்து 3-வது நபர் பார்க்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு வசதியை வழங்கி வருகிறது. இந்நிலையில், வாட்ஸ் ஆப் உரையாடல்களை நாம் அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது என ஆப்பிள் இயங்குளத்தின் பிரபல பாதுகாப்பு வல்லுனர் ஜோனதன் செட்சியார்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வாட்ஸ் ஆப்’-பில் உரையாடல்களை நாம் டெலிட் செய்தாலும், கிளியர் செய்தாலும் அல்லது ‘Clear all chats’ மூலமாக அழித்தாலும் அந்த உரையாடல்கள் முற்றிலுமாக அழிந்துவிடாது. அதை 3-வது நபரால் கண்காணிக்க இயலும். எனவே, போனில் இருந்து ‘வாட்ஸ் ஆப்’-ஐ அழித்து விடுவது ஒன்றே ஒரே தீர்வு. என்கிரிப்சன் வசதியை கொண்டுவந்துள்ள போதிலும் இன்னும் ‘வாட்ஸ் ஆப்’ உரையாடல்களின் பாதுகாப்பு இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது” என தெரிவித்தார்.

இதை அவரே சோதித்து பார்த்து உறுதி செய்துள்ளதாக தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post