Breaking
Fri. Nov 15th, 2024

பிரேசில் நாட்டில் வாட்ஸ் ஆப் செயலிக்கு விதிக்கப்பட்ட திடீர் தடையால் 10 கோடிக்கும் அதிகமானோர் தகவல் பரிமாற முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

வாட்ஸ் ஆப் பாதுகாப்பு அம்சங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், இதனால் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இதனால் இந்தியாவில் வாட்ஸ் ஆப் செயலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் இந்தியாவில் வாட்ஸ் ஆப் செயலியை தடை செய்ய முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த நிலையில் பிரேசில் நாட்டில் நடந்த ஒரு குற்றச் செயலுக்காக குறிப்பிட்ட தகவல்களை வழங்குமாறு பிரேசில் பொலிசார் வாட்ஸ் ஆப் நிறுவனத்தை கேட்டுக் கொண்டனர். ஆனால் தகவல்களை தர அந்நிறுவனம் மறுத்துவிட்டது.

இது குறித்து ரியோ டீ ஜெனீரோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வாட்ஸ் ஆப் செயலுக்கு தடைவிதிப்பதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் 10 கோடிக்கும் அதிகமானோர் தகவல் பரிமாற முடியாமல் அவதிக்குள்ளாகினர். ஆனால் சிறிது நேரத்திலே கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.

பிரேசில் நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வாட்ஸ் ஆப் செயலிக்கு மூன்று முறை தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

By

Related Post