Breaking
Mon. Dec 23rd, 2024

சீனாவில் கிழக்கு ஷெஜியாங் மாகாணத்தில் டோங்யாங் நகரைச் சேர்ந்தவர் மிஸ்டர் கி (40). இவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். எனவே, டோங்யாங்கில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தார்.

அவரை சி.டி. ஸ்கேன் மூலம் டாக்டர் பரிசோதித்தார். அப்போது அவரது இடது புற சிறுநீரகம் முழுவதும் கற்கள் நிறைந்திருப்பதை அறிந்தார். எனவே அவற்றை ஆபரேசன் மூலம் அகற்ற திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

அதை தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக ஆபரேசன் செய்து சிறுநீரகத்தில் இருந்த கற்களை அகற்றினர். அவரது உடலில் இருந்து ஆபரேசன் முலம் 420 சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டன.

இந்த ஆபரேசனை டாக்டர் வெயுபின் செய்தார். சீனாவில் டோபு எனப்படும் தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள் அதிக அளவில் சாப்பிடுகின்றனர். அதனால் சிறுநீரக கற்கள் நோயினால் பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவற்றை அளவாக உணவில் பயன்படுத்த வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2009–ம் ஆண்டு இந்தியாவில் ஒருவருக்கு 1 லட்சத்து 72 ஆயிரத்து 158 சிறுநீரக கற்கள் 3 மணி நேர ஆபரேசன் மூலம் அகற்றப்பட்டன. அதுவே கின்னஸ் சாதனையாக நீடிக்கிறது.

Related Post