Breaking
Fri. Nov 15th, 2024

நமது சூரியக் குடும்பத்தின் ஒரு முனையில் பனி படர்ந்த 67பி/சுர்யூமோவ்-கெரசிமென்கோ என்ற வால்நட்சத்திரத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியிருந்த ரொசெட்டா விண்கலம் கடந்த ஆண்டு படம்பிடித்தது. அதில் உறைந்த நிலையில் எகிப்திய கல்சவப்பெட்டி இருப்பதாக வேற்று கிரகவாசிகளை நம்புவோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எகிப்தின் பிரமிடுகள் வேற்று கிரகவாசிகளின் கண்காணிப்பில்தான் கட்டப்பட்டிருக்க வேண்டும் என பலரும் நம்பி வருகின்றனர். ஆகவே, வால் நட்சத்திரத்தில் உள்ள இந்த மாபெரும் கல்சவப்பெட்டி வேற்று கிரகவாசிகளுக்கானதாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இது மட்டுமின்றி, அருகாமையில் ‘ஆஃப்ரோ மேன்’ என்ற பெயரில் செல்லமாக அழைக்கப்பட்டு வரும் பாடகர் ஜோசப் எட்கர் போர்மன் போன்ற மாபெரும் தலைமுடியுடன் உள்ளவரது உருவமும் இதில் தெரிவதாக யூ.எப்.ஓ. சைட்டிங்ஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By

Related Post