Breaking
Sun. Jan 12th, 2025

-வபா பாறுக்-

ஓரிரு சுயநலமிகளை தவிர மர்ஹூம் அஷ்ரஃபின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர்கள் அனைவரும் நாடு பூராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஆதரிப்பதும்,
அதன் செயலாளராக மர்ஹூம் அஷ்ரஃபின் அன்னியோன்ய நண்பரும், கட்சியின் அதி உயர்மட்ட ஸ்தாபக குழாமின் உறுப்பினருமான சகோதரர் ஸுபைர்தீன் இருப்பதும் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை துளிர்க்கிறது.
 
வாழும்போதே தவறுகளை உணர்ந்து திருப்பங்களை செய்திடவேண்டியது ஸ்தாபகர்களின் மானசீகக் கடமை.
 
ஆகவே ஹக்கீமுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் மீதமான ஸ்தாபக உறுப்பினர்கள் அத்தனைபேரும் பழையன மறந்து புதிய பாதையில் பயணிக்க, மக்கள் காங்கிரஸுடன் இணைந்து முஸ்லிம் தேசியத்தை கட்டியெழுப்ப, ஹஸன் அலி தலைமையிலான கூட்டமைப்பை சக்திமிக்கதாய் ஆக்கவேண்டும்!
நல்லதையே நாட்டமாக்க வல்லவனை பிரார்த்திப்போமாக!
 
-வபா பாறுக்-
ஸ்தாபக பொருலாளர்
SLMC

Related Post