Breaking
Mon. Dec 23rd, 2024

26.01.2017 ஆம் திகதி 3.30 மணிக்கு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் நிலவும் விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் தளபாடங்கள் தொடர்பாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் அவர்களை பிரதி அமைச்சர் அமீர் அலி கல்வி அமைச்சில் சந்தித்து பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது .

எதிர்காலத்தில் ஆசிரியர் குறைபாடு மற்றும் தளபாட குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார்.

மேலும் இன்றைய தினமே மூன்று மாடி நிர்வாக கட்டிடத்திற்கும் , மைதான வடிகால் அமைப்பதற்குமான நிதி ஒதுக்கீடு செய்து தருவதாக உறுதியளித்தார்

பாடசாலை அதிபர் தாஹிர் , பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் ஜெளபர் , பழைய மாணவர்கள் மற்றும் வாழைச்சேனை கல்வி அபிவிருத்தி குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டார்.

16298942_1345968938798128_3808570286441674681_n 16195688_1345969025464786_4235251970884641950_n 16174424_1345969028798119_8364372790498327677_n

By

Related Post