Breaking
Wed. Dec 25th, 2024
-அனா-
வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி நாவானே அபேவன்ச லங்கார தேரரின் இறுதிக் கிரிகைகள் இன்று (17.10.2015) மாலை விகாரை வளாகத்தில் இடம் பெற்றது.
கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட நாவாநே அபேவன்ச லங்கார ஹிமி 2010ம் ஆண்டு தொடக்கம் வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையின் தலைமை விகாராதிபதியாக நியமிக்கப்பட்டு அன்று தொடக்கம் மரணிக்கும் வரை வாழைச்சேனையிலயே விகாராதிபதியாக கடமை புரிந்தார்.
கடந்த 14ம் திகதி இரவு சுகயீனம் காரணமாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இவரது இறுதிக் கிரியையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, இராணுவ உயர் அதிகாரிகள் பொலிhஸார், மரணமடைந்த தேரரின் உறவனர்கள் முஸ்லீம்கள் தமிழர்கள் என அதிகளவான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

By

Related Post