திங்கட்கிழமை(22) இரவு வெள்ளைமாளிகையில் இப்தார் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையில் நடைபெற்ற குறித்த இப்தார் நிகழ்வுக்கு 150 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த நிகழ்வின்போது உரையாற்றிய ஒபாமா,
“அல்குர்ஆன் மனிதன் பூமியில் வாழ்வதற்கான வழிமுறைகளை எமக்கு சொல்லித் தந்துள்ளது. நாங்கள் இப்போது ஒரு குடும்பமாக இருக்கிறோம்.
இதனையே அல்குர்ஆன் எமக்கு காட்டித் தந்துள்ளது. மேலும் ரமழானது பொறுமை,தியாகம்,முகாமைத்துவம் என எல்லாவற்றையும் கற்றுத் தந்துள்ளது” – எனவும் கருத்துத் தெரிவித்தார்.
குறித்த இப்தார் நிகழ்விற்கு பல்வேறு நாடுகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.