Breaking
Tue. Dec 24th, 2024
உலகில் வாழ்வதற்கான மிகவும் உகந்த நகரங்களில் கொழும்பு நகருக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது.
உலக நகரங்களை தரப்படுத்தும் வரிசையில் கொழும்பு நகருக்கு 49வது இடம் கிடைத்துள்ளது. அத்துடன் கடந்த காலத்தில் அதிக மாற்றங்களுக்கு உள்ளான நகரங்களில் கொழும்புக்கு 10வது இடம் கிடைத்துள்ளது.
கொழும்பு நகரம் தவிர, தெற்காசிய நாடுகளின் நகரங்களில் நேபாளத்தின் காத்மண்டு மாத்திரமே தரப்படுத்தலில் இடம்பிடித்துள்ளது.
ஸ்திரத்தன்மை, உட்கட்டமைப்பு வசதி, கல்வி, சுகாதார சேவை உள்ளிட்ட விடயங்கள் இந்த தரப்படுத்தலின் போது கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த பட்டியலில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரம் மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளது.

Related Post