Breaking
Fri. Jan 10th, 2025

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஏற்பாட்டில், மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் முயற்சியில் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் சுயதொழில், மீன்பிடி , தையல் தொழில் , சிறுகடை  போன்ற 243 தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தில், பல்துறை சார்ந்த கைத்தொழில் உபகரணங்கள் நேற்று (26) தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்வு பிரதேச செயலாளர் திரு. தனீஸ்வரன் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் பங்கேற்புடன் குச்சவெளி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, உதவி பிரதேச செயலாளர் முபாரக், இணைப்பாளர் Dr. ஹில்மி முகைதீன் பாவா, முன்னாள் பிரதேச சபைத் தலைவர் தௌபீக், குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்களான நௌசாத், பர்சானா, சர்மியா, ரொஷானா மற்றும் குச்சவெளி விவசாய சம்மேளன் தலைவர் யூசுப், இறக்ககண்டி அஜ்னாஸ், ஜென, நிலாவெளி அசாருடீன் ஆகியோர் கலத்துகொண்டு கைத்தொழில் உபகரணங்களை வழங்கிவைத்தனர்.

 

 

 

 

Related Post