தியாவட்டுவான் மையவாடிக்குப் பின்னாலுள்ள ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலம் ஓட்டமாவடி, மாவடிச்சேனையைச் சேர்ந்த மீராசாஹீப் ஹனிபா (வயது 30) என அடையாளங் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர், ஒரு மனநோயாளி என்றும் நேற்று காலையில் வீட்டிலிருந்து வெளியேறியவர் என்றும் உறவினர்கள் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்தார்களா என்ற சந்தேகத்தில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.