Breaking
Wed. Oct 23rd, 2024

சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்தனர் என்ற குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் ஆகியோரின் விளக்கமறியல் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சீ.பீ. எஸ். மொராயஸே, இவ்வாறு விளக்கமறியலை நீடித்து இன்று  உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கினால் மக்கள் கொந்தளிப்பு ஏற்படும், சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு இடமிருப்பதாக அரச சிரேஷ்ட சட்டத்தரணி வசந்த பெரேராவின் கோரிக்கையை பரிசீலனைக்கு உட்படுத்தியதன் பின்னரே நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு மேலாக அவருடைய மகனான ரவிந்து வாஸ் குணவர்தன மற்றும் இந்திக பமுனுசிங்க, காமினி  சனத்சந்திர மற்றும் பியந்த சஞ்ஜீவ  ஆகிய பொலிஸ் அதிகாரிகள் ஆகியோருக்கே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டியவில் கோடீஸ்வரர் வர்த்தகரான மொஹமட் சியாம் என்பவரை கடத்தி சென்று கொலைச்செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை வழக்கு விசாரணைக்கு முன்வைப்பதாக சட்டமா அதிபர், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

Related Post