Breaking
Sun. Dec 22nd, 2024

முஸ்லிம் ம‌க்க‌ளுக்கு நிர்வாக‌ அல‌கொன்றை த‌ந்து விட்டு வ‌ட‌க்கையும் கிழ‌க்கையும் இணைக்க‌ வேண்டும் என்ற‌ வ‌ட‌மாகாண‌ ச‌பை விக்னேஸ்வ‌ர‌னின் பேச்சை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிற‌து.

விக்னேஸ்வ‌ர‌ன் அவ‌ர்க‌ள் வ‌ட‌ மாகாண‌ச‌பை முத‌ல்வ‌ரே த‌விர‌ அவ‌ர் கிழ‌க்குக்குரிய‌வ‌ர் அல்ல‌. அத‌னால் அவ‌ர் வ‌ட‌க்கின் அபிவிருத்தி ப‌ற்றி பேச‌ வேண்டுமே த‌விர‌ கிழ‌க்கை இணைக்கும் பேச்சை தொட‌ர்வ‌தை அவ‌ர் நிறுத்த‌ வேண்டும்.

முஸ்லிம்க‌ளுக்கு இணைந்த‌ வ‌ட‌க்கு கிழ‌க்கில் ஒரு நிர்வாக‌ அல‌கு என்ப‌து மிட்டாயை கொடுத்து க‌ண்க‌ளைப்ப‌றிக்கும் முய‌ற்சியாகும்.

ஆக‌வே கிழ‌க்கு ம‌க்க‌ள் இணைந்த‌ வ‌ட‌க்கு கிழ‌க்கின் அனுப‌வித்த‌ இன்ன‌ல்க‌ளும் அடிமைத்த‌ன‌மும் போதும். கிழ‌க்கை இப்போது இருக்கும் நிலையில் விட்டு விடும் ப‌டி அவ‌ரை கோருகிறோம்

விக்னேஸ்வ‌ர‌ன் தொட‌ர்ந்தும் இவ்வாறு பேசினால் அவ‌ருக்கெதிராக‌ ஜ‌ன‌நாய‌க‌ ரீதியில் உல‌மா க‌ட்சி ஆர்ப்பாட்ட‌ங்க‌ளை ஊக்குவிக்க‌ நேரிடும் என‌ எச்ச‌ரிக்கிறோம்.

நன்றி – ஸ்ரீலங்கா முஸ்லிம்ஸ் இணையம்

By

Related Post