Breaking
Mon. Dec 23rd, 2024

– ஜவ்பர்கான் –

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலத்தில் இன்று முதலாம் ஆண்டிற்கான மாணவர்களை இணைக்கும் நிகழ்வுகள் நடைபெறவிருந்த நிலையில் பாடசாலை பூட்டை உடைத்தெறிந்து விட்டு இனந்தெரியாத விசமிகள் வேறு பூட்டை போட்டுவிட்டுச்சென்றதால் மாணவர்களும் பெற்றோரும் பாடசாலையினுள் செல்லமுடியாது வெளியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிஞ்சு மாணவர்கள் நீண்ட நேரம் வெயிலில் தவித்ததை அவதானிக்க முடிந்தது.

நேற்று வழமை போன்று பாடசாலையை மூடிவிட்டுச்சென்று இன்று காலை பாடசாலை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு வேறு பூட்டு போடப்பட்டிருந்ததை அவதானித்த அதிபர் பின்னர் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

பொலிஸார் விசமிகளால் போடப்பட்ட பூட்டினை உடைத்து பாடசாலை திறந்ததை தொடர்ந்து பொற்றோர்களும் மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

காத்தான்குடி பொலிஸார் சட்டவிரோதமான முறையில் பாடசாலைக்கு பூட்டுப்போட்ட விசமிகளை தேடி வருகின்றனர்.

By

Related Post