விசர் நாய் கடி நோய் (ரேபிஸ்) மூலம் மரணிப்பவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் கால்நடை சேவைகளின் பணிப்பாளர் வைத்தியர் பி.ஏ்.எல்.ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் இந்த நோய் காரணமாக மரணிப்பவர்களின் எண்ணிக்கை 24 ஆக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக விசர் நாய் கடி நோய் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று (28) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வைத்தியர் பி.ஏ்.எல்.ஹரிச்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.
விசர் நாய் கடி மூலம் இறப்பவர்களின் எண்ணிக்கையை 2020 இல் முற்றாக ஒழிப்பதே எனது நோக்கம் என விசர் நாய் கடி தடுப்பு திட்டத்தின் வைத்திய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இவ்வாறு விலங்குகள் மூலம் கடி பட்டால் முதலில் சிகிச்சை பெறுவது தொடர்பிலும் நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் இதன் போது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.