Breaking
Sun. Dec 22nd, 2024
ஐடிஎன் பணநிலுவை தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் பங்கேற்கமுடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

தமது 70வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று கண்டிக்கு வழிபடுகளுக்காக செல்லவேண்டியுள்ளமையால் இந்த விசாரணையில் பங்கேற்கமுடியாது என்று அவர் அறிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தின்போது ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்கான பல மில்லியன் ரூபா நிலுவை செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் மஹிந்த கடந்த நான்கு தடவைகளாக பாரிய ஊழல் எதிர் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்டார்.

எனினும் இன்று அவரின் சார்பில் சட்டத்தரணிகளே சமுகமளிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post