அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலியின் நிதியொதிக்கீட்டில், நன்னீர் மீன் வளர்பை மேம்படுத்தும் நோக்கில், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான என்.எம்.நஸீரின் ஆலோசனையில், குளியாப்பிட்டிய விசினவ பகுதியில் உள்ள 07 குளங்களுக்கு மீன் இட்டு வளர்ப்பது சம்பந்தமான ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (27) மடலஸ்ஸயில் நடைபெற்றது.
குளியாப்பிட்டிய பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தவிசாளர் எம்.சி.இர்பான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நன்னீர் மீன் வளர்புடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டதுடன் குளியாப்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர் சபீர் மற்றும் ஊர்மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் போது குளங்களில் மீன்கள் விடப்படும் காலம், அவை வளர்ச்சியடையும் விதம் மற்றும் மீன்களை எப்போது பிடிப்பது என்பது பற்றிய தெளிவுகள் அவ்வதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டது.
(றி)