Breaking
Wed. Mar 19th, 2025
ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் முன்னாள் தலைவரான விஜயகுமாரதுங்கவின் நினைவு நிகழ்வில், மகிந்த ராஜபக்ச பங்கேற்றமை வியப்பை அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
விஜயகுமாரதுங்கவின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்காத ஒரே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவே. இவ்வாறான ஓர் பின்னணியில் விஜயகுமாரதுங்கவின் நினைவு நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றியமை ஆச்சரியமளிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு,மகிந்தவிற்கும் தமது கணவருக்கும் இடையில் ஆரம்பம் முதலே முரண்பாடுகள் காணப்பட்டதாகவும் இறுதிக் கிரியைகளில் கூட பங்கேற்காதவர் நினைவு நிகழ்வில் பங்கேற்றமை வியப்பை அளிப்பதாக சந்திரிகா தெரிவித்துள்ளார்.

By

Related Post