வில்பத்து வனப்பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச குடியேற்றங்கள் இருப்பதாக தேசிய பெளத்த சங்க சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் நெத் எப் எம் வானொலி புதிய சர்ச்சியை கிளப்பியுள்ளது.
கடந்த சனியன்று மரிச்சுகட்டி பிரதேசத்துக்கு ஊடகவியாளர்கள் குழு ஒன்று அழைத்துசெல்லப்பட்டிருந்தனர் அப்போது சில சமூக ஆர்வலர்களும் வந்திருந்ததை அங்கு விஜயம் மடவளை நியூஸ் குழுவால் அவதானிக்க முடிந்தது .
கடந்த சனியன்று கொழும்பில் இருந்து மரிச்சுக்கட்டி பிரதேசத்துக்கு விஜயம் செய்த கடந்த ஜனாதிபதி தேர்தலில் வண்ணத்தி சின்னத்தில் போட்டியிட்ட இப்ராகிம் மிப்ளார் அவர்களுடன் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து இஸ்லாத்தை தழுவிக்கொண்ட கலாநிதி ஷரிப் டி அள்வில் அவர்களும் வருகைதந்திருந்ததுடன் அங்கு ஊடகங்களுக்கு அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட அவர் அக்மார்க் பச்சை சிங்களத்தில் கருத்து வெளியிட்டதையும் எமக்கு அவதானிக்க முடிந்தது.
இவ்வாரான ஒரு நிலையில் நேற்றைய தினம் நெத் எப் எம் செய்தி குழு ஒரு விடியோவை பதிவேற்றம் செய்துள்ளனர் .. சரிப் டி அள்வில் மரிச்சிகட்டியில் இருந்த விடியோவின் ஒரு பகுதியை சுட்டிக்காட்டி அவர் வேறு நாட்டில் இருந்து வந்த வித்தியாசமான உடையணிந்த வேற்றுமொழி பேசக்கூடிய ஒருவர் என்று சிங்கள மக்களிடத்தில் முஸ்லிம்களை பற்றி பொய்யாக இட்டுக்கட்டிய தகவலை பரப்புவதை அவதானிக்க முடிகிறது.
பல விருதுகளை பெற்றுள்ளதாக பீற்றிக்கொள்ளும் இவர்களுக்கு விசாரிக்காமல் செய்தி வெளியிடும் இவர்களின் இந்த லட்சத்துக்கு ஒரு விருது வழங்க வேண்டும்…
டம்மி சிறிசேனவுக்கு (இருபதாயிரம் பேர் )வாக்களித்த சிங்கள மக்கள் வாழும் இந்த நாட்டில் இந்த போலியான பிரசாரத்தை நம்பவைப்பது என்பது மிகப்பெரிய விடயமல்ல….