Breaking
Mon. Dec 23rd, 2024
 
6 மாதங்களாக தடுப்புக் காவலிலும் சிறையிலும் வைக்கப்பட்டிருந்த மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரின் விடுதலையை அடுத்து கட்சித் தொண்டர்களும், உறுப்பினர்களும், அபிமானிகளும், நலன்விரும்பிகளும், மனித நேயத்தை மதிப்பவர்களும் அவரை சந்தித்து, சுக நலன் அறிவதற்காக கொழும்புக்கு தினமும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவர் புத்தளம் சென்றிருந்த போது, வவுனியா, மன்னார், முலைத்தீவு, அம்பாறை, கொழும்பு மற்றும் வடக்கு, கிழக்கில் உள்ள பல ஊர்களில் இருந்து மக்கள் அவரை சந்திப்பதற்காக புத்தளத்துக்கு வருகை தந்திருந்தனர்.
 
இவ்வாறு, ஆதரவாளர்களும் அபிமானிகளும் வருகை தருவதில் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், எதிர்வரும் 29 ஆம் திகதி, வன்னி மாவட்டத்துக்கு நேரில் விஜயம் செய்து, மக்களுடன் உரையாட விரும்புகிறார்.
 
அந்தவகையில்,
2021.10.29 (வெள்ளிக்கிழமை)
 
வவுனியா (சாளம்பைக்குளம்) – மாலை 3.00
2021.10.30 (சனிக்கிழமை)
 
முல்லைத்தீவு – காலை 9.00
மன்னார் – மாலை 3.00

Related Post