இலங்கை சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் நிறைவுகாண் தொழில்வல்லுனர் சேவைகள் மற்றும் துணைமருத்துவ சேவைகளின் பயிற்சிக்காக பயிலுனர்களை ஆட்சேர்க்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சுவிண்ணப்பங்களை கடந்த 24ஆம் திகதி அரச வர்த்தமானியூடாக கோரியுள்ளது.
பொதுச்சுகாதார பரிசோதகர் பயிற்சியைத்தவிர ஏனைய 12 தொழிற்பயிற்சிகளும் ஆங்கிலமொழிமூலத்தில் நடத்தப்படும்.
மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர், மருந்தாளர், பற்சிகிச்சையாளர், இதயத்துடிப்பு பதிவாளர் உள்ளிட்ட 12 பயிற்சி நெறிகள் 2 வருடகாலம் இடம்பெறும்.
பொதுவாக க.பொ.த. (சா.த) பரீட்சையில் சித்திபெற்றிருப்பதுடன் க.பொ.த. உயர்தர விஞ்ஞான பிரிவில் சித்தியடைந்திருக்கவேண்டும். 18- – 35வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் இறுதித் திகதி ஜூலை 20 ஆகும்.