Breaking
Mon. Dec 23rd, 2024

விண்வெளியில் பயிரிடக் கூடிய காய்கறி செடிகள் உருவாக்குவது குறித்து நெதர்லாந்து பல்கலைக் கழகம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.

வேற்று கிரகங்களில் மனிதர்கள் குடியேறுவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் சென்று தங்குவதற்கான கனவு தொடங்கி அது நடைமுறைப்படுத்தப்படும் சூழ்நிலை நிலவுகிறது.
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் சென்று தங்கும் பட்சத்தில் அவர்கள் சாப்பிட காய்கறிகள் உற்பத்தி செய்ய செடிகள் உருவாக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதற்கான ஆராய்ச்சியில் நெதர்லாந்து பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது.

செவ்வாய் கிரகம் மற்றும் சந்திரனில் உள்ள மண் மாதிரிகளை அமெரிக்காவின் ‘நாசா’ மையம் சேகரித்துள்ளது. மேலும் அரிசோனா பாலைவனத்தில் சந்திரனின் மண்ணும், செவ்வாய் கிரக்தின் மண் ஹவாய் எரிமலையிலும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

எனவே, அங்கிருந்து கடந்த 2013&ம் ஆண்டில் 100 கிலோ மண்ணை பெற்று நெதர்லாந்தில் வெஜினிங்ஜன் ஆய்வகத்தில் வைத்து தக்காளி, பட்டானி உள்ளிட்ட பல தாவர செடிகள் சந்திரன், செவ்வாய் தட்ப வெப்ப நிலையில் வளர்க்கப்படுகின்றன.

தொடக்கத்தில் அந்த மண்ணால் ஆன தரைகள் தண்ணீரை உறிஞ்சவில்லை. ஆனால் நாளடைவில் அவை சீராகின. அவற்றில் தற்போது பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

By

Related Post