கல்முனைப் பிரதேசத்தில் மஞ்சள் கடவைகளில் வாகனங்களை நிறுத்தி பயணிகளுக்கு வழிவிடாது செல்லும் சாரதிகள் தொடர்பில் போக்குவரத்து பொலிஸார் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை, பெரிய நீலாவணை ஆகிய பிரதேசங்களிலுள்ள பிரதான வீதிகளில் பாதசாரிக் கடவைகள் ஊடாக பயணிகள் கடக்க முற்படும்போது வாகனச் சாரதிகள் வேகத்தை குறைத்து வாகனங்களை நிறுத்தி வழிவிடாது செல்கின்றனர். இதனால் மஞ்சள் கடவைகளில் பாதையைக் கடக்க பலமணிநேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சில வாகன சாரதிகள் பயணிகள் பாதையை முழுமையாக கடந்து முடிப்பதற்குள் அவர்களை உரசிச் செல்வதைப்போல் செல்கின்றனர். இவ்வாறான சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கேட்கின்றனர்.