Breaking
Sat. Nov 23rd, 2024

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் கொலை சம்­பவம் தொடர்பில் மக்­களின் கோபமும் கொந்­த­ளிப்பும் நியா­ய­மா­னதே. பாட­சாலை சிறு­மியை பாலியல் கொடு­மைக்கு உள்­ளாக்கி கொலை செய்த நபர்­களை மக்கள் தண்­டிக்க துடிப்­ப­தையும் ஆக்­ரோஷப்­ப­டு­வ­தையும் நாம் குறை­கூற முடி­யாது என சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் தலை­வரும் கோட்டே நாக விகா­ரையின் விகா­ரா­தி­ப­தி­யு­மான மாது­லு­வாவே சோபித தேரர் தெரி­வித்தார்.

மக்கள் தமது கோபத்தை வெளிப்­ப­டுத்த சட்­டத்தை கையில் எடுக்­க­வேண்டாம் என்றும் சட்டம் தன் கட­மையை சரி­யாக செய்­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் கொலை குழப்­ப­க­ர­மான நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் அது தொடர்பில் கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

மனி­தா­பி­மா­னத்­துக்கு எதி­ராக நடை­பெறும் சம்­ப­வங்­களை எந்த வகை­யி­லேனும் கட்­டுப்­ப­டுத்த வேண்டும். பாலியல் கொடு­மைகள், கொலை­களை தடுத்து மக்­களின் பாது­காப்பை பலப்­ப­டுத்­த­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். அதேபோல் மக்கள் தமது மன­ச்சாட்­சிக்கு அடி­ப­ணிந்து நடக்க வேண்டும். வட மாகா­ணத்தில் இடம்­பெற்ற பாட­சாலை மாணவி வித்­தி­யாவின் பாலியல் வன்­கொ­டுமை மற்றும் அவரை கொலை செய்­தமை கண்­ட­னத்­துக்­கு­ரிய விட­ய­மாகும். இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய அனைத்து குற்­ற­வா­ளி­க­ளையும் உட­ன­டி­யாக கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்த வேண்டும். இவ்­வா­றான நபர்கள் கட்­டாயம் சட்­டத்­துக்கு அமைய தண்­டிக்­கப்­பட வேண்டும். ஆனால் எந்த ஒரு சந்­தர்ப்­பத்­திலும் சட்­டத்­துக்கு முர­ணான வகையில் எந்த சம்­ப­வங்­களும் நடை­பெறக் கூடாது.

மாணவி வித்­தி­யாவின் கொலை சம்­பவம் தொடர்பில் அம் மக்­களின் கோபமும் கொந்­த­ளிப்பும் நியா­ய­மா­னதே. பாட­சாலை சிறு­மியை பாலியல் கொடு­மைக்கு உள்­ளாக்கி கொலை செய்த நபர்கள் மீது மக்கள் கோபப்­ப­டு­வ­தையும் அவர்­களை தண்­டிக்கத் துடிப்­ப­தையும் நாம் குறை கூற முடி­யாது. ஆனாலும் எல்­லா­வற்­றையும் தாண்டி நாட்டில் சட்டம் என்ற ஒன்று உள்­ளது. சட்­டத்­துக்கு முர­ணான வகையில் எவரும் செயற்­ப­டு­வது சட்­டத்தை மீறும் செய­லாகி விடும். பின்னர் சட்­டத்தை கடைப்­பி­டிக்க பலரை கைது­செய்ய வேண்­டிய நிலை ஏற்­படும். அவ்­வா­றான ஒரு நிலைமை தான் இன்று வடக்கில் ஏற்­பட்­டுள்­ளது. மக்கள் தமது கோபத்தை வெளிப்­ப­டுத்த ஆக்­ரோ­ஷமாக நடந்து கொள்­வது சாதா­ரண பொது­மக்கள் அனை­வ­ரி­னதும் செயற்­பா­டு­களை பாதித்­துள்­ளது. குற்­ற­வா­ளி­களை தண்­டிக்கும் பொறுப்பு பொலி­ஸா­ருக்கும் நீதி­மன்­றத்­துக்கும் உள்ள நிலையில் மக்கள் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்க நினைப்­பது ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­வொன்­றாகும்.

குற்­ற­வா­ளிகள் என சந்­தே­கிக்­கப்­படும் நபர்கள் பொலி­ஸா­ரினால் கைதுசெய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்­கள்­மீது இப்­போது விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இந்­நி­லையில் மக்கள் கொந்­த­ளிப்­பதும் தமது கைகளில் சட்­டத்தை எடுத்து தண்­டிக்க நினைப்­பதும் சட்­டத்­திற்கு முர­ணா­னது. ஆகவே மக்கள் அமை­தி­யாக இருந்தால் மட்­டுமே உண்­மை­யான குற்­ற­வா­ளி­களை சரி­யாக இனங்­கண்டு அவர்­களை தண்­டிக்க முடியும்.

அதேபோல் இந்த சம்­ப­வத்தில் காவல் துறையின் ஒத்­து­ழைப்பு மிகவும் அவ­சி­ய­மா­னது. ஆகவே பொது மக்கள் பொலி­ஸா­ருக்கு ஒத்­து­ழைப்பு வழங்கி குற்­ற­வா­ளி­களை தண்­டிக்க உதவ வேண்டும். ஒருசில அரசியல் தலையீடுகள் இதன் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் அது உண்மையாக இருப்பின் மக்கள் அவற்றை இனங்கண்டு உண்மையின் பக்கம் நிற்கவேண்டும். அரசியல் எதிர்பார்ப்புகளில் பொதுமக்கள் சிக்கிக்கொண்டு வடக்கில் குழப்பங்களை ஏற்படுத்திவிடாது அமைதியாக செயற்படுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Post