புதிதாக இடமாற்றம் பெற்று வந்துள்ள நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணை நடைபெறவுள்ளது.
கடந்த வருடம் மே மாதம் குறித்த மாணவி கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் முதலில் 9 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் கடந்த மாதம் ஆரம்ப பகுதியில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இவ் வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும் கடந்த மாத இறுதியுடன் நீதிவான் எஸ்.லெனின்குமார் இடமாற்றம் பெற்று சென்றமையால் இவ் வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்துக்கு புதிதாக இடமாற்றம் பெற்று வந்துள்ள நீதிவான் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை குறித்த மாணவி தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருவதுடன் 7 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் விசாரணைகளுடன் தொடர்புடைய பல அறிக்கைகள் இதுவரை மன்றில் சமர்ப்பிக்கப்படாமலும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, கடந்த வருடம் யாழ்.சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வித்தியாவின் தாயாரையும், சகோதரரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், வித்தியாவின் படுகொலை தொடர்பில் விஷேட நீதிமன்றம் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.