புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 9ஆவது சந்தேக நபர் சுவிஸ் குமார் கைது செய்யப்பட்ட பின்னர் எவ்வாறு வெள்ளவத்தைக்குச் தப்பிச் சென்றார் என்பது தெடர்பாக தெளிவானதும், சரியானதுமான அறிக்கையினை மன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளருக்கு ஊர்காவற்றுறை நீதவான் எம். எம் .றியால் உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போது 9 சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது இவ்வழக்கு தொடர்பாக 9ஆவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட சுவிஸ்குமார் எவ்வாறு வெள்ளவத்தைக்குச் தப்பிச் சென்றார் என்பது தொடர்பான தெளிவான அறிக்கை இவ்வழக்கின் அடுத்த தவணையில் மன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளருக்கு உத்தரவிட்ட நீதவான் எதிர்வரும் 18ஆம் திகதிக்கு வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.