புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் குறித்த பகுதியில் இடம்பெற்ற பதற்ற நிலமைகள் தொடர்பிலான விசாரணை அறிக்கை பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் 13 ஆம் திகதி காணாமல் போன வித்தியா 14 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து புங்குடுதீவில் பதற்ற நிலை நீடித்தது. இது குறித்த அறிக்கையினை பெற விசேட குழுவொன்று பொலிஸ் மா அதிபரால் நியமிக்கப்பட்டிருந்தது.
மேலும் படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 9ஆவது சந்தேக நபர் மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டவர் மீண்டும் வெள்ளவத்தையில் பிடிக்கப்பட்டார்.
அவ்வாறு பிடிக்கப்பட்டவர் எவ்வாறு வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டார் என்றும் விளக்கம் கேட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.