Breaking
Mon. Dec 23rd, 2024

– ஜவ்பர்கான் –

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் மண்முனை சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் 27 வயது ஒரு குழந்தையின் தந்தையான இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (15) 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொக்கடிச்சோலை பக்கமிருந்து வந்த துவிச்சக்கர வண்டி கல்முனை பக்கமிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த 27 வயதுடைய புதுக்குடியிருப்பைச் சேர்ந்த எம்.தயாபரன் என்பவர் ஸ்தலத்திலேயே பலியானதுடன் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த வந்தவர் மற்றும் துவிச்சக்கர வண்;டியில் வந்தவரும் படுகாயமடைந்துள்ளனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post