Breaking
Sun. Dec 22nd, 2024

-மயூரன் –

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்து யாழ்.கண்டி வீதியில் இருந்து சோமசுந்தரம் வீதியில் திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளை மோதியதில் அதில் பயணித்த ஊடகவியலாளர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ். மாவட்ட செயகத்திற்கு அருகில் கண்டி வீதியில் நேற்று மாலை (02) இடம்பெற்ற வீதி விபத்தில் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் காயமடைந்த உதயன் பத்திரிகையின் புகைப்பட ஊடகவியலாளரான கந்தையா ரட்ணம் ( வயது 68 ) இன்று அதிகாலை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post