Breaking
Sun. Dec 22nd, 2024

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் நாவலபிட்டியிலிருந்து வட்டவளை நோக்கி வந்த வானும் கினிகத்தேன- கடவள பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில் பஸ்ஸில் பயணித்த 9 பேரும் வானில் பயணித்த 3 பேரும் காயமடைந்த நிலையில், கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

பஸ் தவறான பகுதியில் பயணித்ததாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாகவும் பஸ் சாரதியை கைதுசெய்துள்ளதாகவும் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

By

Related Post