Breaking
Wed. Dec 25th, 2024

பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ மற்றும் எஸ்.பி திஸ்ஸாநாயக்க உள்ளிட்ட இனவாதிகள் சிலர் தொடர்ச்சியாக ஊடகங்கள் வாயிலாக தன்மீது சுமத்தி வந்த அவதூறுகள் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பொலிஸ் திணைக்களத்தில்  அவர்கள் மீது ஏற்கனவே முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.

அந்த முறைப்பாடு தொடரில் மேலதிக தகவல்களையும் ஆவணங்களையும் வழங்கும் நோக்கில் ரிஷாத் பதியுதீன் இன்று (02) காலை திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவுற்குச் சென்று வாக்கு மூலம் ஒன்றை வழங்கினார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரிஷாத் பதியுதின்,
“தன் மீது சுமத்தப்பட்டு வரும் அத்தனை குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை எனவும் பொலிஸ் திணைக்களம் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெளிவான அறிவிப்பு ஒன்றை விடுத்த பின்னரும் இவர்கள் வேண்டுமென்றே தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.  ”
பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ண தேரரும் திரும்ப திரும்ப ஒரே அவதூறை சுமத்தி வருவதாகவும் முடிந்தால் அவர் பொலிஸில் முறையிட்டு தன் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதே தர்மம் எனவும் ரிஷாத் பதியுதீன் குறிப்பிட்டார்.

Related Post