Breaking
Mon. Nov 25th, 2024

விமல் வீரவன்சவுக்கு முடியுமாக இருந்தால் 5 ஆயிரம் பேரை கூட்டி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து காட்டட்டும். நான் அரசியலில் இருந்து விலகுவேன் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி பகிரங்க சவாலை விடுத்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவைப் பிரதமராக்குவது எப்படிப் போனாலும், வீரவன்ச குழுவினர் ஐவரும் சேர்ந்து பிரதேச சபை ஒன்றையாவது வெற்றிகொள்ள முடியாது.

நேற்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

விமல் வீரவன்சவுடன் சேந்துள்ள ஐவரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்திருந்தால் தமக்கு இடம் கிடைக்காது போகும் என்பதை நன்கு விளங்கி வைத்துள்ளனர்.

இதனாலேயே வெளியேறிய மஹிந்த ராஜபக்ஷவை போட்டியிடச் செய்யப் போகிறார்கள்.

இதுவரையில் ஜனாதிபதியாக இருந்து விட்டுச் சென்ற எவரும் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டது கிடையாது.

அத்துடன், பதவிகளைக் கேட்டு பெற்றுக் கொள்ளவும் வரவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.

Related Post