Breaking
Sun. Dec 22nd, 2024
இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையில் விமான சேவையை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளை, எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளதாக தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (திங்கட்கிழமை) அந்நாட்டு பிரதமர் பிரயூட் சாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது இருநாட்டு அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டதோடு, தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி செயற்பாடுகளில் இலங்கைக்கு உதவுமாறு ஜனாதிபதி மைத்திரி கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த தாய்லாந்து பிரதமர், இதுகுறித்து உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக்கொள்ள விருப்பம் தெரிவித்தார்.
அத்துடன், மசகு எண்ணெய், மீன்பிடி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்ய ஒருதொகுதி தாய்லாந்து முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருவார்கள் என்றும் தாய்லாந்து பிரதமர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் தயா கமகே, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, முதலீட்ட சபையின் தலைவர் உபுல் ஜயசூரிய ஆகியோரும் கலந்துகொண்டனர்.

By

Related Post