Breaking
Wed. Dec 25th, 2024

அயர்லாந்து விமானம் போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் இருந்து டூப்ளினுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. அதில் 165 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் இருந்தனர்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது பிரேசிலை சேர்ந்த 24 வயது வாலிபருக்கும், அவரது அருகே அமர்ந்திருந்த பெண் பயணிக்கும் இடையே வாக்குவாதமும், அதை தொடர்ந்து தகராறும் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண் பயணி, பிரேசில் வாலிபரை கடித்துக் குதறினார்.

இதனால் அலறிய அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே விமானத்தில் இருந்த டாக்டர்களும், நர்சுகளும் ஓடோடிச் சென்று அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இருந்தும் அவருக்கு நினைவு திரும்பவில்லை. தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருந்தார்.

அதை தொடர்ந்து அவருக்கு அவசர மருந்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக விமானத்தின் கேப்டன் அறிவித்தார். எனவே, விமானம் அயர்லாந்தின் ‘கார்க்’ விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது.

உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட பிரேசில் வாலிபர் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

அதை தொடர்ந்து அவரை கடித்துக் கொன்ற போர்ச்சுக்கல்லை சேர்ந்த 44 வயது பெண் கைது செய்யப்பட்டார். அவரது சூட்கேசை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதில 2 கிலோ எடையுள்ள போதை மருந்து இருந்தது தெரியவந்தது.

By

Related Post