Breaking
Sun. Dec 22nd, 2024

மாயமான விமானத்தைத் தேடும் ‘ஆபரேஷன் தலாஷ்’ பணி 4வது நாளாக இன்றும் தொடர்கிறது.

இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏன்32 ரக விமானத்தைத் தேடும் பணிக்கு ஆபரேஷன் தலாஷ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பற்படை கப்பல்களில் சர்வதேச பாதுகாப்பு தொழில்நுட்பம் மூலமாக, ஆழ்கடலில் விமானத்தைத் தேடும் பணி நடந்து வருகிறது.

சென்னையை அடுத்த சேலையூர் காவல்நிலையத்தில், காணாமல் போன விமானம் குறித்து இந்திய விமானப் படை அதிகாரிகள் சார்பில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இஸ்ரோவின் ரிஸாட் செயற்கைக் கோள் மூலமாகவும், விமானத்தைத் தேடும் பணி நடந்து வருகிறது.

By

Related Post