Breaking
Mon. Dec 23rd, 2024

“The history of SLAF Diyatalawa and the Regiment” (தியத்தலாவ விமானப்படை வரலாறும் விமானப்படை படைப்பிரிவும்) எனும் தலைப்பில் எழுதப்பட்ட புத்தகமொன்று பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி எயார் சீப் மார்ஷல் கோலித குணதிலகவிடம் கையளிக்கப்பட்டது.

எயார் வைஸ் மார்ஷல் ஏபி சோஸா (ஓய்வு) மற்றும் விங் கொமாண்டர் எஸ்ஆர் ரத்னபால (ஓய்வு) ஆகியோரால் எழுதப்பட்ட இந்த இதழானது அண்மையில் (11) பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து கையளிக்கப்பட்டது.

மேற்படி புத்தகம் ஜனவரி 26 ஆம் திகதி விமானப்படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் விமானப்படைத் தளபதி எயார் மாஷல் ககன் புலத்சிங்கள தலைமையில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தியத்தலாவ விமானப்படை வரலாற்றில் வெளிக்கொணரப்பட்ட இந்த தனித்துவமான வெளியீடானது விமானப்படை படைப்பிரிவினர் பலரின் இதயங்களை கவர்ந்திழுக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளமை இந்நூலின் சிறப்பம்சமாகும்.

By

Related Post