Breaking
Fri. Sep 20th, 2024

விமா­னப்­படை தள­பதி சுகத் புளத் சிங்­க­ளவின் உத்­த­ர­வுக்கு அமைய விமா­னப்­படை நிர்­வாக இயக்­குனர் இதற்­கான அறி­வு­றுத்­தலை விமா­னப்­படை வீரர்­க­ளுக்கு வழங்­கி­யுள்ளார்.

அதன்­படி சுமார் 4000 விமா­னப்­படை வீர வீராங்­க­னைகள் தமது முகப் புத்­த­கத்தை பயன்­ப­டுத்தும் உரி­மையை இழந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. அத்­துடன் தற்­போது விமா­னப்­படை வீரர்­களும் அதி­கா­ரி­களும் பயன்­ப­டுத்­தி­வரும் முகப்­புத்­தக கணக்­கு­க­ளையும் அவர்கள் மூட வேண்­டிய நிர்ப்­பந்­தத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக விமா­னப்­படை வீரர்கள் தெரி­விக்­கின்­றனர்.

பாது­காப்பு பேர­வையில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு அமை­வாகவே இவ்­வாறு முகப் புத்­தக தடை அமுல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் போதும் ஏனைய படை­களில் அத்­த­கைய தடைகள் அமுல் செய்­யப்­ப­ட­வில்லை.

இந்நிலையில் இது தொடர்பில் விமா­னப்­ப­டையின் புதிய ஊடகப் பேச்­சா­ள­ராக கட­மை­களைப் பொறுப்­பேற்­றுள்ள கெப்டன் சந்­திம டி அல்­விஸை கேசரி தொடர்­பு ­கொண்­டு­கேட்­ட­போது முகப் புத்­த­கத்தில் தேசிய பாது­காப்பு விவ­கா­ரங்கள் தொடர்­பி­லான பதி­வு­க­ளுக்கு ஏற்­க­னவே தடை உள்­ளது. அத்­துடன் சில கட்­டுப்­பா­டு­களும் உள்­ளன.

அதுவே மீண்டும் ஞாப­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதுவே தற்போது திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக நினைக்கின்றேன். தேசிய பாதுகாப்பு கருதியே அத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றார்.

By

Related Post