Breaking
Mon. Dec 23rd, 2024
குவைத்தில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஒன்று திடீரென மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த குறித்த விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

யு.எல்.230 ரக விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடும் மூடுபனி காரணமாகவே குறித்த விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

By

Related Post