Breaking
Mon. Dec 23rd, 2024

சீனாவைச் சேர்ந்த ஒரு தம்­ப­தி­யினர் தாம் பயணம் செய்­ய­வி­ருந்த விமா­னத்தை தவ­ற­விட்­டதால், அவ்­வி­மானம் புறப்­ப­டு­வதை தடுப்­ப­தற்­காக விமான ஓடு­பா­தையில் அமர்ந்து ஆர்ப்­பாட்டம் நடத்­தி­யுள்­ளனர்.  பெய்ஜிங் சர்­வ­தேச விமான நில­யைத்தில்  அண்­மையில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றது.

ஷாங்காய் நக­ருக்குச் செல்லும் பிளைட் சி.ஏ.1519 விமா­னத்தில் இத் தம்­ப­தி­யினர் பயணம் செய்­ய­வி­ருந்­தனர்.  காலை 9.30 மணிக்கு இவ்­வி­மானம் புறப்­ப­ட­வி­ருந்­தது. ஆனால், பய­ணி­க­ளுக்­கான இறுதி அழைப்பின் பின்­னரும் இவர்கள் விமா­னத்தில் ஏற­வில்லை.

தாம் விமா­னத்தை தவ­ற­விட்­டதை உணர்ந்த இத்­தம்­ப­தி­யினர் விமான ஓடு­பா­தைக்குள் புகுந்து விமா­னத்தின் அடிப்­ப­கு­தியில் அமர்ந்து கொண்டு, விமானம் புறப்­ப­டு­வதை தடுத்­தனர். விமா­னத்தில் ஏற வேண்­டிய  நேரம் தமக்குத் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என அவர்கள் கூறினர். பின்னர் இத்­தம்­ப­தி­யி­னரை பொலிஸார் கைது செய்தனர். மேற்படி விமானம் 20 நிமிட தாதமதத்தின் பின் புறப்பட்டுச் சென்றது.

By

Related Post