தற்காலத்தில், ரோபோ எனப்படும் எந்திர மனிதனின் சேவைகள் பல துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையை தொடர்ந்து, விமான நிலையத்தில் வழி தெரியாமல் தடுமாறும் பயணிகளுக்கு வழி காட்ட உதவும் ரோபோ ஒன்றை இங்கிலாந்து நிபுணர்கள் தயாரித்துள்ளனர்.
விமான நிலையத்தில் வழி தெரியாமல் தடுமாறும் பயணிகளிடம் நட்பு ரீதியில் பழகி அவர்களை ஒரு வாசலில் இருந்து மற்றொரு வாசலுக்கு அழைத்து செல்லும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோ பரிசோதனை இங்கிலாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் கடந்த மாதம் நடத்தப்பட்டது.
இறுதியாக, எதிர்வரும் மார்ச் மாதம் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.