கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தால் 10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை சுதந்திர ஊழியர்சங்க ஊழியர்களால் 5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தாலேயே இவ்வாறு 10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
10, 000 ரூபாய் கொடுப்பனவு, வைத்திய காப்புறுதி, 4 சதவீதம் அனர்த்த கடன், பியா புத்து மன்றத்தின் ஊடாக தொழில்வாய்ப்பு. பாதுகாப்பு பிரதானி தொடர்பில் விசாரணை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.