Breaking
Mon. Dec 23rd, 2024

எதிர்வரும் மே 28ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு நேரப்படி பி.ப 2:48 மணிக்கு மக்காவுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கின்றது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவித்துள்ளது.

Qibla-Direction

இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு இணைப்பாளர் அஷ்-ஷைக் எம். அப்துல் வஹ்ஹாபினால் ஊடக அறிக்கையொன்றை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வருடத்தில் இரு தடவைகள் சூரியன் மக்காவுக்கு நேராக உச்சம் கொடுக்கிறது. அவை மே 28 மற்றும் ஜூலை 16 ஆகிய தினங்களாகும். இவ்வருடம் மே 28ஆம் திகதி கொழும்பு நேரப்படி பி.ப 2:48 மணிக்கு மக்காவுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கின்றது. அன்றைய தினம் குறித்த அந்நேரத்தில் செங்குத்தாக உள்ள ஒரு பொருளுக்கு ஏற்படும் நிழலினூடாக சூரியனை முன்னோக்குவது கஃபாவை முன்னோக்குவதாகவே அமையும்.

ஆகவே சரியான கிப்லாவை அறிந்து கொள்வதற்கு நேர காலத்துடன் நேர்த்தியான ஒரு தடியை 900 (அதாவது பூமிக்கும் அந்தத் தடிக்குமிடையிலான கோணம் செங்கோணம்) ஆக இருக்கும் விதத்தில் நாட்டுவதுடன் பிரயோகிக்கும் கடிகாரத்தின் நேரத்தையும் சரி செய்து கொள்ள வேண்டும். பின்னர் குறித்த நேரத்தில் சூரியனின் மூலம் அந்தத் தடிக்கு ஏற்படும் நிழலின் மீது கோடிட்டுக் கொள்ளவேண்டும் பிறகு கோட்டினூடாக தடியை நோக்கும் திசையையே கிப்லாவாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

சூரியன் மக்காவை உச்சங்கொடுக்கும் அன்றைய தினம் தங்களது மஸ்ஜித்கள், வீடுகள் மற்றும் தேவையான இடங்களுக்கு சரியான கிப்லாவை அறிந்து கொள்ள மேல் குறிப்பிட்டவாறு ஆவண செய்துகொள்ளும்படி சம்பந்தப்பட்டவர்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு கேட்டுக்கொள்கிறது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post